செய்திகள்

சிறுவனாக 15 வயதில் கொலை செய்தவருக்கு 38 ஆவது வயதில் இன்று பாகிஸ்தானில் மரண தண்டனை

பாகிஸ்தானில் 15 வயதாக இருந்தபோது கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு 22 வருடங்கள் சிறையில் இருந்த நபர் ஒருவர் இன்று 38 ஆவது வயதில் தூக்கில் இடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

மனித உரிமைகள் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களையும் மீறி இந்த தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் 150 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உலகில் கூடுதலான அளவு மரண தண்டனை விதிக்கும் நாடாக பாகிஸ்தான் மாறி வருவதக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.