செய்திகள்

சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்ரூ லவர்சிலிப் தோட்டப்பகுதியில் இருந்த கிணற்றில் அதே தோட்டப்பகுதியை சேர்ந்த டி.சகிர்தன் (வயது 04) என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் 02.04.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 உயிரிழந்த சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10