செய்திகள்

சிறுவர் இளையோர் நாடக கருத்தரங்கு

லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சித் தொடரின் சிறுவர் இளையோர் நாடக கருத்தரங்கு பெப்ரவரி 28 சனிக்கிழமை இடம்பெற்றது.

70 களின் பிற்பகுதியில் திரு பாலேந்திரா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் அவைக்காற்றுக்கலைக்கழகம் லணடனில் கால்பதித்து தமிழ் நாடகப் பணிகளை மேற்கொண்டுவருவதுடன் சிறுவர்கள் இளையோர்களுக்கான நாடகப்பள்ளியையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இந்தவகையில் கலைப்பயணத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்வை Watford Watersmead அரங்கில் சிறப்பாக நிகழ்த்தி இருந்தார்கள்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=yVqZKDyjO3g&feature=youtu.be” width=”500″ height=”300″]

இந்த நிகழ்வின் தொடராகவே வெள்ளி விழா நிகழ்ச்சிகள் பற்றிய பார்வையும் லண்டன் தமிழ் சிறுவர்கள் நாடகங்கள் தொடர்பான கருத்தடலும் Ruislip மெதடிஸ் மண்டபத்தில் பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக அங்கத்தவர்கள், நாடக ஆர்வலர்கள்,  விமர்சகர்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளையோர்கள் பலர் கலந்து கொண்டார்கள். முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவரையாளரும், ஆய்வாளரும் விமர்சகருமான திரு மு. நித்தியானந்தன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நேர்த்தியான அளிக்கைகளை தொடர்ச்சியாக வழங்குவதுடன் இளையோரின் நாடக ஆற்றலை வளர்த்தெடுப்பதோடு அவர்களுக்கான மேடைநாடகங்களை உரிய முறையில் பயிற்றுவித்து வருடாவருடம் மேடையேற்றி வருகின்றார்கள். இந்த மேடையேற்றங்களில் மலைகள் வழிமறித்தால்,அரசரின் புத்தாடை, புதிய மேடையேற்றம் கண்ட சூறாவளி நெட்டை மரங்கள்போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.