செய்திகள்

சிறுவர் தினத்தன்று லண்டனில் ஆர்ப்பாட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் வேண்டுகோள்

இலங்கை சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கான அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று 06.10.2019 அன்று பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன்பாக நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்துக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கையின் வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் இணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள காணொளி மூலமான வேண்டுகோள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.