செய்திகள்

சிலாபத்தில் சீனப் பெண்ணிடம் பாலியல் சேட்டைவிட்ட 22 வயது இளைஞன் கைது

சிலாபம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த சீன பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அந்த விடுதியின் ஊழியர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய குறித்த சீனப் பெண் தனது நண்பர்களுடன் அந்த விடுதியின் அறையொன்றில் தங்கியிருந்த நிலையில் அந்த அறைக்குள் சென்றுள்ள 22வயதுடைய ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வேளையில் அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதன்போது அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.