சிவகார்த்திகேயனின் அடுத்த திட்டம்
‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
நடித்த சில படங்களிலேயே இந்த நடிகருக்கு இவ்வளவு ரசிகர்களா என்று, திரையுலகினர் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு விறுவிறுவென வளர்ந்து வருகிறார். இவர் நடித்த ரஜினி முருகன் என்கிற படம் விரைவில் ரிலீஸாக விருக்கிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது நணபரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி, அதில் தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
அந்தப் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாக்யராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். அதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிப்பார் எனத் தெரிகிறது. எனவே, இப்படத்தின் மூலம் விஜய், சூர்யா, விக்ரமைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.