செய்திகள்

சிவஞானபோத சூத்திரங்கள் முதல்நிலை அறிமுகம் – பாகம் 02

பாகம் 02

அவன், அவள், அது என்று நான் உணருவனவெல்லாம், தோன்றுகின்றன, நிலைத்துவாழ்கின்றன, (திதி) ஒடுங்கி மறைகின்றன. ;உள்ளதே தோன்றும் தோன்றியது அழியாது’(இதனைச் சற்காரியவாதம் என்பர்) என்பது மெய்ஞ்ஞான முதன்மொழி. உள்ளதே தோன்றும் தோன்றியது அழியாது என்பது நான் பௌதிக (Phலளiஉள) பாடத்தில் படித்த விஞ்ஞானஉண்மையும் கூட. அடடா, கிறிஸ்தவர்கள் கூட வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை என்றுதானே அனுதினமும் பூசையில் பலமாகச் சொல்கிறார்கள். வைணவத்துறவி சுவாமி விவேகானந்தர் கூட விரிவது வாழ்க்கை ஒடுங்குவது மரணம் என்றார். எனவே மாற்றங்கள் தொடர்கின்றன. அழிவு என்று ஒன்றில்லை. எனவே அவன், அவள், அது தோன்றி  நின்று ஒடுங்கி மீளவும் ஒடுங்கிய இடத்தில் நின்று தோன்றுகின்றன. எனவே நானும் ஒடுங்கி மீளவும் ஏதோ ஒன்றாக மாற்றம் பெற்றேயாக வேண்டும். எனவே இவைகளில் ஒன்றாக உள்ள நானும் என்றும் உள்ள பொருளாகத்தானே இருத்தல் வேண்டும். நான் என்றும் உள்ள பொருள் என்றால் நான் காணும் இந்த உலகமும் என்றும் உள்ள பொருள். அதாவது உலகின் ஒரு பகுதி ஒடுங்கிமறைய மறுபகுதியாக அது மாறி வெளிப்படும். இதனைச் சுனாமியில் கண்டோமே. பிலிப்பைன்ஸ்க்கு அருகில் நிலத்தடியில் பர்மியப் புவித்தட்டுக்கும் இந்தியப் புவித்தட்டுக்குமிடையில் எற்பட்ட ஒரு சிறிய சறுக்கலைச் சமப்படுத்த அப்பப்பா இந்தோனேசியா முதல் இலங்கைவரை எத்தனை நாடுகளில் பேரலை எழுந்து பேரழிவுகளைக் கண்டோம். ஆக மொத்தமாக நான் என்னும் என் உயிரும் என்றும் உள்ள பொருள். நான் வாழ்ந்து அனுபவம் பெறும் உலகமும் என்றும் உள்ள பொருள். அப்படியானால் என்னையும் இந்த உலகத்தையும் இயக்கும் அந்த அதுவும் என்றும் உள்ள பொருள்.

sam-92கொஞ்சம் பொறுங்கள் இந்த பதி என்னும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ள பொருள், பாசம் என்பதைத் தந்து என்னை வாழவைக்கின்ற இந்த நான் வாழும் உலகம்,  உடலில் கட்டுண்டதால் பசு ஆக உவமைபெறும் உயிர் என்னும் நான், ஆதியன என்றும் உள்ள முப்பொருள், என்று எம் முன்னோர் தமிழில் முப்பொருள் உண்மைகள் என்று சொன்ன தத்துவம் இதுவல்லவா? தமிழரின் ஆன்மீகத்தத்துவமாம் சைவசித்தாந்தம் அன்றே சொன்ன உண்மைகள் இன்று மெல்ல மெல்ல அறிவுலகாலும் ஏற்கப்பட்டு வருகின்றன. மேலும் முப்பொருளகள் என்னாது முப்பொருள் என்று பேசப்படுகிறதே அப்படியானால் அது தமிழிலக்கண வழுவில்லையா? மூலப்பொருளும், ஒரு அஃறிணைப் பொருளாகவே பேசப்படுகிறது. காரணம் பதி பசு பாசம் என்னும் மூன்றும் வேறுவேறான ஆனால் பிரிக்க முடியா உட்தொடர்பு கொண்ட ஒரே பொருளே.

நான் யார் என்று மாணவன் குருவிடம் கேட்டான். நீ அதுவாக இருக்கின்றாய் என்று குரு திருவாய் மலர்ந்தார். “நான் அதுவாக இருக்கிறேன்” என்பது தனக்கு விளங்கிவிட்டது என்று பதிலிறுத்தான் சீடன். அவன் தான் அதுவாவதாகக் கூறிவிட்டதாக ஆதிசங்கரர் அளித்த புதுவிளக்கம் ஒன்றே பத்தாம் நூற்றாண்டில் அத்தைவதம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் கர்மவினை நீங்கி இறக்கும் பொழுது ஒன்றாகிவிடும்)  என்கிற தத்துவம் பிறக்கவைத்தது. இது தவறானதென விளக்கிடப் பிறந்ததே சுத்தாத்து விதம் (இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிருக்கும் இறைவனுக்கும் என்றுமே உள்ளநிலையில் இருவினை ஒப்பும் சக்திநிபாதமும் அடைந்த உயிர் சிவோகம்பாவநிலையில் வாழ்ந்து இறைவனுடன் தாள் ூ தலை ஸ்ரீ தாடலை ஆகப் பொருந்தி பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அமைதி பெறும்)  என்பதை விளக்கும்  சைவசித்தாந்தம் தோன்றியது.

sam-95

இறைவனும் உயிரும் இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிரில் என்றுமே உள்ளது. தன்னை அணுத்தன்மையுடையதாக்கும் ஆணவத்தால் இந்த உண்மையை அறியாது, இருளில் உள்ள உயிர், தன்னையும் அறியமுடியாமல் தன்தலைவனையும் அறியமுடியாமல் தவிக்கும் துன்பநிலை கண்டு அந்த உயிரின் மேல் இறைவன் காட்டிய பாசம்தான் அந்த உயிருக்கு உடலையும் காலம ஒன்றையும் அதுசெய்த வினைப்பயனை அனுபவிப்பதற்கான  நியதியையும், அது தன் ஆணவத்திலிருந்து விடுபடுவதற்காகக் கலைiயும்  கலையில் சிறப்புற்றுப் பெறும் வித்தை என்னும் திறத்தையும் அதன்வழி கல்வியால் செல்வத்தால் வீரத்தால் இவற்றைத் அதிகம் அதிகம் தேடித்தான் வாழவேண்டுமென்று பிறக்கும் அராகம்  என்னும் ஆசையையும் இந்த நிலையில் புருடன் என்னும் மானிடத்தகுதியையும் இவற்றை அனுபவித்து வாழும் இடமாக மாயையிலிருந்து உலகையும் அளிக்கிறான் என்பது சைவசித்தாந்தம். காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் ஏழையும் ஆன்மதத்துவங்கள் என்பர். எனவே வாழ்வை வாழ்வதற்கு மூலப்பொருள் அளித்த இடமாம் உலகம் மூலப்பொருளில் இருந்து வேறானது அல்ல. உயிர் ஏதோ வேறானதா? அதுவுமில்லை. உயிருள் ஒன்றாயும் உடனாயும் வேறாயும் இருந்து செயற்படுபவனே கடந்து உள்ளிருக்கும் கடவுளாயிற்றே. ஆகவே உயிரும் மூலப்பொருளில் இருந்து வேறானதல்ல. ஆதலால் பதி பசு பாசம் என்னும் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான ஆனால் இரண்டல்ல ஒன்றுமல்ல என்ற இயல்பு கொண்டனவே. ஆதலால் தான் முப்பொருள்கள் என்று பன்மையில் பேசாது  என்றுமுள்ள முப்பொருள் என்று திரித்துவம் என்று கிறிஸ்தவம் சொல்லும் நிலையில், அயர்லாந்தின் தேசிய சின்னமாக இலங்கும்  சாம்றோக் இலை (ளூயஅ சுழஉம) எவ்வாறு ஒரேநடுப்பகுதியையும் மூன்று கிளைப்பகுதிகளையும் கொண்டிலங்குகிறதோ அவ்வாறு ஒரேதன்மையானதாகவும் முவ்வேறு தோற்றம் கொண்டதாகவும் பதி பசு பாசம் உள்ளது. பதி எல்லாவற்றுக்கும் உயிராக, உயிர்உள்ள போதும் இல்லாத போதும் ஆதாரமானது. பாசம் என்னையும் ஒரு பொருளாக்கி என்று மாணிக்கவாசகப் பெருமான் நெஞ்சுருகிக் கூறுவது போல் என்னை உயிர் என்னும் வடிவு கொள்ள வைத்த இறைவனின் பெருங்கருணை – பேரன்பு. பசு எவ்வாறு தொழுவத்தில் கட்டப்பட்டுள்ளதோ அவ்வாறே நானும் உயிராக உடலுடன் கட்டப்பட்ட நிலையில் இந்த வாழ்வை அனுபவிப்பதால் என் உயிரை இயக்கும் என் ஆன்மாவுக்குப் பசு என்று அழகுத் தமிழ் சொல்லும் வழக்கு உள்ளது. இப்பொழுது எனக்கு நம்முன்னோர்கள் சொன்ன பதி பசு பாசம் என்றால் என்னவென்று புரிகிறது.

sam-94அடுத்து நான் ஏன் பசுவாகக் கட்டுண்டு நிற்கின்றேன்?  என் உடலை நான் எனக் கருதி ஐம்புலன்களும் தரும் இன்பநாட்டங்களுக்கும் துன்பநாட்டங்களுக்கும் உள்ளாகிச் செயற்படுகையில் என் செயல் (வினை) நன்மையையோ தீமையையோ விளைக்கிறது. என் செயலால் வரும் அவ்வினைப்பயன் எனக்கே சொந்தமானது என்பதினால் நான் அதனை அனுபவித்தேயாக வேண்டும் என்கிற நியதியை விதியை நானே எனக்கு விதித்து விடுகிறேன். விதிக்கு ஊழ் என்ற சொல்லாட்சியைத் தருகிறது திருக்குறள். ஊழ் என்றால்  மலர்தல் என்று பொருள். எந்தத் தாக்கத்திற்கும் சமமான எதிர்த்தாக்கம் உண்டென்று விஞ்ஞானமும் சொல்கிறது. வினைக்கேற்ப வாழ்வு மலர்தலையே ஊழ் என்கிறது திருக்குறள். மதிவழி மானிடர் வாழ்க்கை என்று விதியை இறைவனைச் சார்;ந்து நின்று கடப்பதற்கான உத்தியே இறைவன் தரு வாழ்வென்னும் அருங்கொடை. இதனை மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்று முன்னோர்கள் ஆலயத்து மொழியாக எங்கள் காதுகளுள் பதியவைத்தனர். நான் செய்த வினையை நானே அனுபவித்தாக வேண்டும். கடவுள் நன்மையையும் தருவதில்லை. தீமையையும் தருவதில்லை. படைக்கவுமில்லை. அழிக்கவுமில்லை. நான் செய்யும் வினையின் பயனை அனுபவித்து முடிக்க நான் தோற்றுவிக்கப்படுகின்றேன். அவ்வாழ்வின் பயன் விருப்பமானதாக அமைந்தால் நன்மை என்கிறேன் தீயதானதாக அமைந்தால் தீமை என்கிறேன் நினைத்தது நடந்து விட்டால் மகிழ்ச்சி நடக்காவிட்டால் துக்கம். தேடுவது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி கிடைக்காவிட்டால் துக்கம். நானே தோற்றுவிக்கும் இந்த வினைச் சுழற்சியின் வினைப்பயன்கள் இல்லாது போகும் வரை நான் பேராஇயற்கை நிலை அடையாது பேரும் பிறப்பு இறப்புச் சுழற்சிக்குள் சுழல்கின்றேன். “நிறுத்தும் குணம் அற்றவன்” என்று அருணந்தி சிவாச்சாரியார் இறைவனின் இயல்பைக் கூறுவார் நோக்காமல் நோக்குபவன் என்று அப்பர் அருமையாக எடுத்துரைப்பார். அதாவது இறைவன் உயிர்களின் சுதந்திரத்தில் தானாகத் தலையிடுபவன் அல்ல. எப்படி நான் பெற்ற பிள்ளையே தனக்குரிய வயது வந்ததும் என் விருப்பைத் தன் விருப்பாகக் கருதாது என் கருத்தைத் தன் கருத்தாகக் கொள்ளாது தன்வழி தனிவழி தன்வாழ்வைக் கொண்டு போகிறதோ – அந்நேரம் எவ்வாறு நான் அந்தப்பிள்ளையின் சுதந்திரத்தில் தலையிட முடியாது உள்ளேனோ? அவ்வாறே எங்கும் இறைந்துள்ளவனான இறைவனும் உள்ளான். இதனால் அந்த வினைப்பயன் மீளவும் அனுபவிக்கப்படுவதற்காக நான் இன்று வாழும் வாழ்வில் கொண்டுள்ள உயிர்த்தன்மையிலிருந்து இறைவனில் ஒடுங்கி, மீளவும் அவன் அளப்பரிய பாசத்தால் நான் ஒடுங்கிய அதே மூலத்திலிருந்து மீளவும் தோன்றுகிறேன்

sam-96

சிவஞானபோதம் முதல் மூன்று நூற்பாக்களும் பொதுவான நிலையில் மூலப்பொருளுக்கு பிரமாணம் (அறிவு விளக்கம்) கூறுகின்றது. அவ்வகையில் 1ம் நூற்பா உயிர்களுக்கு எல்லாம் பதியாக  என்றும் உள்ள அந்தம் ஆதியாய் உள்ள மூலப்பொருள் குறித்து அறிவார்ந்த விளக்கமொன்றை நாம் இதுவரை பார்த்தவற்.றின் பின்னணியில் சூத்திரமாக்குகின்றது

அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்பது 1ம் சூத்திரம்.  இறைவன் வெளிப்படுதலையும் விளக்கி உள்ளதே தோன்றும் தோன்றியது அழியாது என்கிற சற்காரியவாதத்தின் அடிப்படையில் அந்தமும் ஆதியும் ஆனார் என இறைவனை விளக்கிய விஞ்ஞானமெய்ஞ்ஞான அறிவு விளக்கம் (பிரமாணம்) இந்த 1ம் நூற்பா அவன் அவள் அதுவென்பன தோன்றுதல் நிலைத்தல் ஒடுங்கல் என்னும் வினைத்தன்மை உடையனவாக உள்ளன. ஒடுக்கமடைகையில் எதில் ஒடுங்குகிறதோ அதிலிருந்தே மீளவும் அனுபவித்து முடிக்கப்படாத தன்வினைப்பயனை அனுபவிப்பதற்காக அம்மூலப்பொருளால் தோற்றுவிக்கப்படுகிறது. எனவே உயிர்க்கு எது அந்தமாக உள்ளதோ அதுவே ஆதியாக உள்ளது என்பர் புலவர். எனவே எனக்குப் பதியாக எதில் நான் ஒடுங்குகின்றேனோ அந்தப்பதியே நான் தோன்றுவதற்கும் முதலாகின்றான். என்வினைப்பயன் இந்த இறப்புப் பிறப்புக்குக் காரணமாகிறது. அடுத்தவாரத்தில் பாசம் குறித்து நோக்குவோம்.

last episode