செய்திகள்

சிவனொளிபாதமலை பருவகாலம் முடிவடைந்தது (படங்கள்)

ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்த சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 05.05.2015 அன்றுடன் நிறைவு பெற்றது.

சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தையும் மற்றும் பூஜைப் பொருட்களையும் புனித விக்கிரங்கள் அனைத்தும் 05.05.2015 அன்று நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு வரப்பட்டது.

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்னவினால் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜைப் பொருட்கள் புனித விக்கிரங்களை 06.05.2014 அன்று காலை 8 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்பட்டது.

நோட்டன் லக்ஸபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்வுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமன சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரியர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்ததாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

DSC08696

DSC08697

DSC08700

DSC08702

DSC08719

DSC08727

DSC08740

DSC08745

DSC08749

DSC08753

DSC08756

DSC08758

DSC08763

DSC08764