செய்திகள்

சிவன் முதியோர் இல்ல திறப்பு விழா

வவனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கோவிலினால் புதிதாக அமைக்கப்பட்ட சிவன் முதியோர் இல்ல கட்டிட திறப்பு விழா இன்று புதன்கிழமை வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது.

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் இரண்டாவது குருமகாசந்நிதான ஸ்வாமிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகளால் திறந்து வைக்கப்பட்ட இக் கட்டிடத்தொகுதியில் இதுவரை பராமரிக்கப்பட்டு வந்த 154 முதியவர்களும் தங்கவுள்ளனர்.

இந் நிகழ்வின் போது ஸ்வாமிகளின் ஆசியுரையுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

DSC07850 DSC07876 DSC07883 DSC07891 DSC07894