செய்திகள்

சிவராத்திரிக்கு திருக்கேதீச்சரத்திற்கு செல்ல சிறப்பு பேருந்து சேவை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலனைக்கருத்தில் கொண்டு யாழ். மத்தி தனியார் பேருந்தது நிலையத்திலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக யாழ் துரசேவைப் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை சிவராத்திரி தினத்தன்று காலை ஆறுமணிமுதல் இரவு ஏழு மணிவரை விசேட பேருந்துகள் இயக்கப்படும்.  பக்தர்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பட்டுள்ளது எனவும் அவர்கூறினார்.