செய்திகள்

சிவில் பிரதிநிதிகள் இன்றி அரசியலமைப்பு பேரவை செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

சிவில் பிரதிநிதிகள் இன்றி மற்றைய 7 பேருடன் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகள் மூவரை நியமிப்பதற்காக பாராளுமன்றத்தில் அனுமதியினை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல் நிலைமையினையடுத்து நேற்று முன் தினம் அமைச்சரவை கூடிய போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை சிவில் பிரதிநிதிகள் இன்றி 7 பேருடன் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஆணைக்குழுக்களை அமைக்கும் பணிகளை அரசியலமைப்பு பேரவை முன்னெடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.