செய்திகள்

சி.எஸ்.கே. அணியின் உடையை அணியாமல் களமிறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டேன்: தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடையை அணியாமல் களமிறங்கிய போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

9-வது ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வென்ற பிறகு புனே அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் பேசினார். சென்னை அணிக்கு விளையாட முடியாமல் போது குறித்து கேள்வி எழுப்பிய போது தோனி “நான் புனே அணிக்கு விளையாடப் போகிறேன் என்று தெரியும். ஆனால் புதிய அணியின் உடையை அணிந்துக்கொண்டு வீரர்களின் பட்டியோலோடு டாஸ் போடுவதற்காக ஆடுகளத்திற்கு செல்லும் போதுதான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

இந்திய அணிக்காவும், ஜார்கண்ட அணிக்காவும் டி20 விளையாடிய போட்டிகளில் உள்ளேன். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். சி.எஸ்.கே. அணியின் உடையை அணியாமல் களமிறங்கிய உண்மையிலேயே அது உணர்ச்சிகரமான தருணம். ஆனால் சென்னை அணிக்கு விளையாடிது போல் புனே அணிக்கும் விளையாடுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.