செய்திகள்

சீசெல்ஸ் இலங்கை வங்கி தொடர்பில் விசாரணை: அமைச்சர் ரவி தகவல்

சீசெல்ஸில் இலங்கைக் வங்கி கிளை ஒன்றை அமைத்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்று ஆராயுமுகமாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணநாயகக்க தெரிவித்துள்ளார்.

இந்த இலங்கை வங்கிக் கிளை, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் அமைக்கப்பட்டதா என்பது குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தும் என்றும் ரவி கருணநாயக்க கூறியுள்ளார்.

46 இலங்கை பிரஜைகள் மாத்திரம் இருக்கும் சீசெல்ஸில் இலங்கை வங்கிக் கிளை அமைப்பதற்கான தேவை என்ன வந்தது என்பது குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.