செய்திகள்

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ளார். இதன்போது, துறைமுக நகர் திட்டத்தின் முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட சீனாவின் முதலீடுகள் தொடர்பில் பரஸ்பர கலைந்துரையாடல்களில் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாள் விஜயமாக சீனா செல்லவுள்ள பிரதமர், அந்நாட்டு தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக, சீனாவின் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருதல் மற்றும் சீன அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்க கூடிய புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கையுடன் மீண்டும் வலுவான உறவுகளை கட்டியெழுப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயம் உதவும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ தெரிவித்துள்ளார். சீன தலைவர்கள் இலங்கை பிரதமரின் வருகை தொடர்பில் உற்சாகத்துடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சீன அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் சீன அரசாங்கத்தினால் கொழும்பில் கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட ஹோட்டல் திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

N5