செய்திகள்

சீனாவில் கனமழைக்கு 15 பேர் பலி: பத்து லட்சம் பேர் பாதிப்பு

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 15 பேர் வரை பலியாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக அங்குள்ள பல மாகாணங்களில் வீசி வரும் கடும் புயல் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜியாங்சி மற்றும் புஜியன் உட்பட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு விமான சேவைகளும் தடைப்பட்டுள்ளன.