செய்திகள்

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர். இதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், குணமடைந்தவர்களும் அடங்குவர்.(15)