செய்திகள்

சீனாவுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த திட்டம் குறித்தும் இறுதிமுடிவெடுக்கப்படும் என்கிறது இலங்கை

இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து அந்த நாட்டுடன் கலந்தாலோசிக்காமல் இறுதி முடிவை அரசாங்கம் எடு;க்காது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மங்கள சமரவீர அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னரே இதனை தெரிவித்துள்ளார்.
சீனா வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள மங்களசமரவீர இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து மாத்திரம் ஆராயவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீடு தொடர்பான எந்த முடிவை எடுப்பதற்கு முன்னரும் அந்த நாட்டு அரசாங்கத்துடன் கலந்தாலோசிப்போம்
சீனாவின் முதலீடுகளை இலங்கை எப்போதும் வரவேற்கின்றது, இலங்கையில் முதலீடு செய்வது முன்னரை விட சீனாவிற்கு தற்போது பாதுகாப்பானது.
இலங்கையில் சகல முதலீட்டாளர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதையும்,சட்டத்தின் ஆட்சி,நல்லாட்சிமற்றும் வெளிப்படைத்தன்மை மீள ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதலீட்டிற்கு சாகமான நிலை விளங்குவதையும் புதிய அரசாங்கம் விரும்புகின்றது.
சகல திட்டங்களும் எதிர்காலத்தில் தரத்தின் அடிப்படையிலேயே முன்னுரிமை வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி சீனா தொடர்ந்தும் நம்பகத்தன்மை மிக்க சகாவாக இருக்கவிரும்புகின்றது,இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.