செய்திகள்

சீனா கிராமத்தில் மியன்மார் விமானதாக்குதலில் நால்வர் பலி-

சீனாவின் எல்லைக்குட்பட்ட பகுதியொன்றினுள் மியன்மாரின் தாக்குதல் விமானத்திலிருந்து குண்டொன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான யுனானிலுள்ள லிங்காங் நகரிலுள்ள கரும்பு தோட்டமொன்றினுள் மியன்மார் விமானத்திலிருந்து குண்டொன்று விழுந்துவெடித்துள்ளதாகவும் இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஓன்பதுபேர் காயமடைந்துள்ளதாகவும் சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ஹொகாங் பிராந்தியந்தில் செயற்பட்டுவரும் மியன்மார் தேசிய ஜனநாய கூட்டமைப்பு என்ற கெரில்லா அமைப்பின் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்த விமானத்திலிருந்தே இந்த குண்டுகள் வீழ்ந்துவெடித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் மியன்மார் இராணுவம் ஏவிய எறிகணையொன்று சீன பகுதிக்குள் தவறுதலாக விழுந்து வெடித்ததில் வீடொன்று தரைமட்டடகியதும் சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றை சம்பவத்தை தொடர்ந்து சீனா குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு தனது ஜெட் விமானங்களை அனுப்பி வைத்துள்ளதுடன,; மியன்மார் தூதுவரை அழைத்து கண்டித்துள்ளதுடன் குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சீனாவின் எல்லைகிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளது.
மியன்மாரின் கொஹாங் பிராந்தியத்தில் இடம்பெறும் மோதல்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீனா வம்சாவளியினர் சீனாவின் யுனான் பிராந்தியத்திற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பிட்ட மியன்மார் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் சீனா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஆயுத குழுவொன்று கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து போருhடுவதாக குற்;றம்சாட்டிவரும் மியன்மார் சீனா தனது எல்லைக்குள்ளிலிருந்து பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுக்கவேண்டும் என கோரியுள்ளது.
எனினும் தனது எல்லைக்குள்லிருந்து தாக்குதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதை சீனா மறுத்து வருகின்றது.
சீனாவிற்கும், மியன்மாரிற்கும்இடையில் 2000 கிலோமீற்றர் பொதுவான எல்லை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.