செய்திகள்

சீனா சென்றடைந்தார் மைத்திரி: இன்று முக்கிய பேச்சு

சீனாவுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இன்று சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, புறப்பட்டு சென்ற ஜனாதிபதியும் குழுவினரும் நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங்கைச் சென்றடைந்தார்.

பீஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ வரவேற்றார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பீஜிங்கில் தங்கியிருக்கும் மைத்திரிபால, சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீனாவின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.