செய்திகள்

சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் முதல் முறையாக விஜய் உடன் நடிக்கிறார்

விஜய் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் முதல் முறையாக அவருடன் நடிக்கிறார் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய்யுடன் மட்டும் நடிக்கவில்லை. இப்போது அந்தக் குறை தீர்ந்த சந்தோஷத்தில் சமூக வலைத் தளங்களில் தகவலைப் பகிர்ந்து வருகிறார்.