செய்திகள்

சீன கப்பல்களுக்கான மீன்பிடி அனுமதியை இலங்கை ரத்துச் செய்தது

இலங்கைக் கொடியுடன், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் ஆட்சேபனையையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், ஏற்கனவே செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி செயற்பட்டதற்காகவே, சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி  அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, சீன நிறுவனங்கள் தாம் பிடிக்கும் மீன்களின் அளவு, மீன்பிடிப்பதற்கு தாம் கையாளும் பொறிமுறைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.