செய்திகள்

சீ.சீ.ரி.வியினுடாக வீதி சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நடவடிக்கை : நாளை முதல் கொழும்பில் நடைமுறைக்கு வருகிறது

வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க சீ.சீ.ரி.வி கமராக்களை பயன்படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை முதல் கொழும்பில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளதுடன். இதன்போது வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் முக்கிய வீதிகளில் சீ.சீ.ரி.வி பாதுகாப்பு கமரா பொறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்களில் பதிவாகும் காட்சிகள் அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
n10