செய்திகள்

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(15)