சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 விமானம் வழக்கு விஷேட வழக்காக விசாரணை
விடுதலைப்புலிகள் அமைப்பினால் வில்பத்துவை சரணாலயத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை விசேட வழக்காக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த விமானம் பலாலியிலிருந்து இரத்மலானையை நோக்கி பயணித்த போதே 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட எரிகணை தாக்குதலினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் பயணித்த 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசேட வழக்காக கவனத்தில் கொண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதி கட்டளையிட்டுள்ளார்.
சந்தேகநபர்களான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எரிகணை படையணியின் உறுப்பினர்கள் இருவரையும் அன்று வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.