செய்திகள்

சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவின் தலைவராகிறார் சந்திரிகா

சுதந்திரக்கட்சியின் ஆலோசனை குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் கோல்டன் உறுப்பினருமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்ரமநாயக ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும் சந்திரிகாவை கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இனி ஆலோசனைக் குழுவிற்கு அதிகாரங்கள் சில அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது