செய்திகள்

சுதந்திரக் கட்சி இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து நாமல் ராஜினாமா

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து நாமல் ராஜபக்‌ஷ இராஜினாமா செய்துள்ளார்.  கட்சியில் சந்திரிகா – மைத்திரியின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையிலேயே தன்னுடைய பதவியை அவர் இன்று ராஜினாமா செய்தார்.

இதனையாடுத்து அந்தப் பதவிக்கு சாந்த பண்டாரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் இந்த நியமனமும் வழங்கப்பட்டது.