செய்திகள்

சுதந்திர கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகிறது.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதுடன், கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்தல், கோட்டாபய ராஜபக்‌ஷவை கட்சிக்குள் உள்ளீர்க்கும் யோசனை குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது எனத் தெரிகிறது.