செய்திகள்

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பசில் ராஜினாமா

Pasilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இன்று பொதுஜன ஐக்கிய முன்னணி விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டிருகிறது. சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்கின்றபோதிலும் தொடர்ந்தும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக அவர் செயற்படுவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவளை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேனாவுக்கு விட்டுக்கொடுக்க மகிந்த ராஜபக்‌ஷ முன்வந்திருக்கின்றமையும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.