செய்திகள்

சுனில் வட்டகலவிடம் ஒரு பில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு கோரியுள்ள கோதாபய ராஜபக்ஷ

ஒரு பில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஜே.வி.பியின் சட்;டத்;தரணியான சுனில் வட்டகலவுக்கு தனது சட்டத்தரணியூடாக அறிவித்தல் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற 2013 தயட்ட கிருள கண்காட்சியின் போது மேற்கோள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அதனுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் தொடர்புபடுத்தி நேற்று முன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சுனில் வட்டகல தலைமையிலான குழுவொன்று முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே சுனில் வட்;டகலவுக்கு இந்த அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு மான நஷ்ட ஈடாக  ஒரு  பில்லியன் ரூபாவை ஒருவார காலத்துக்குள் செலுத்துமாறும் இல்லையென்றால்  சட்ட ரீதியில் நடவடிக்கையெடுப்போம் என கோத்தாபய ராஜபக்ஷ சுனில் வட்;டகலவுக்கு அறிவித்துள்ளார்.