செய்திகள்

சுன்னாகதில் பொது இடத்தில் புகைப்பிடித்த இருவருக்கு அபராதம் விதிப்பு

யாழ்.சுன்னாகம் நகரப் பகுதியில் பொது இடத்தில் நின்று மக்களுக்கு அசௌகரியத்ரத ஏற்படுத்தும் வகையில் புகைப்பிடித்த இருவர்   புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு 1500 ரூபா அபராதம் விதித்து நீதவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கடந்த 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர்களிருவருக்கும் எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.குறித்த வழக்குப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே நீவானால் இவ்வாறு அபராதத் தொகையைச் செலுத்துமாhறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யுhழ்.நகர் நிருபர்-