செய்திகள்

சுன்னாகத்தில் கிராமச் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது

நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா அச்சம் நீடித்து வரும் நிலையில் இன்று முதல் கிராமச் சந்தைகள் இயங்க ஆரம்பிக்கும். சந்தைகள் இயங்கவுள்ள இடங்கள் பற்றி எமது சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முழுவதுமாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.சுதர்சன் தெரிவித்தார்.எனவே அத்தியாவசிய பொருட்கள் தேவையானவர்கள் மட்டும் குறித்த சந்தைகளுக்கு சென்று மரக்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களான கையுறை மற்றும் முகக்கவசம் (மாஸ்க்) அணியாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எனக்கு அல்லது பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் உடனடியாக முறையிட முடியும் எனவும் தெரிவித்தார்.மேலும் சன நடமாட்டத்தையும் நெருசலையும் குறைப்பதற்கு நாம் சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.ஊரடங்கு அமுலில் இருக்கின்ற போது எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொலிஸாரின் அனுமதியுடன் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் குறித்த கிராமச் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.(15)