செய்திகள்

சுன்னாகத்தில் சட்ட விரோத மின்சாரம் பெற்ற ஐவருக்கு அபராதம்

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஐவருக்கெதிராக தலா பத்தாயிரம் ரூபா அபராதம் மல்லாகம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மயிலங்காடு, ஏழாலைப் பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஐவரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவருக்கும் எதிராகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் ஐவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

யாழ்.நகர் நிருபர்-