செய்திகள்

சுன்னாகத்தில் திருட்டுக்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் சுன்னாகம் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே 28,30,45,50 ஆகிய வயதினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களால் திருடப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களான எல்.சி.டி தொலைக்காட்சிப் பெட்டி,4 கைத்தொலைபேசிகள்,மிக்சி,றைஸ் குக்கர்,கிறைண்டர் மற்றும் 4 நீரிறைக்கும் மோட்டர் இயந்திரங்கள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்.நகர் நிருபர்-