செய்திகள்

சுன்னாகம் பொதுநூலக பொன்விழா நிகழ்வும் புத்தக வெளியீடும்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குடபட்ட சுன்னாகம் பொதுநூலகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளும் நூல் வெளியீடும் நேற்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் காலை 11 மணி முதல் பொதுநூலக மண்டமபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர்.வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் நிகழ்வுக்கான ஆசிச் செய்தி வாசிக்கப்பட்டதுடன் நூலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நூலகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விழாவில் பிரதேச சபை உறுப்பினர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

988573_1138300739529979_4994491191993835933_n 10447034_856482277773098_5946230487413578743_n 10888445_856482021106457_521392400155567028_n