செய்திகள்

சுயசரிதைப் படத்துக்கான ராயல்டியாக 80 கோடி ரூபாய் கேட்ட தோனி

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டு வரும் படம், எம்எஸ் தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். இயக்கம் – நீரஜ் பாண்டே. இந்தப் படத்துக்கான ராயல்டியாக 80 கோடி ரூபாயை தோனி கேட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

தோனியின் கதையை முன்வைத்து படம் உருவாக்கப்படுவதால் படக்குழு தோனிக்கு ரூ.20 கோடி தந்துள்ளதாகவும் ஆனால் தோனி தனக்கான ராயல்டி தொகையாக ரூ.80 கோடி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தோனி தொடர்புடைய கிரிக்கெட் வீடியோக்களைப் பெறுவதற்காக படக்குழுவிடம் ரூ.15 கோடி கேட்டுள்ளது பிசிசிஐ. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.