செய்திகள்

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை புறக்கணித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 28 பேர் கைது

கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியமைக்காக ஜா-எல, சுதேவெல்ல பகுதியில் 28 பேரை சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு ஜா-எல பொதுசுகாதார அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.எனினும் இவர்கள் அந்த உத்தரவுகளை பின்பற்றாது அசமந்த போக்கில் நடமாடி வந்த நிலையிலேயே கடற்படையினரின் உளவு நடவடிக்கை காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை புறக்கணித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜா-எல, சுதேவெல்ல பகுதியில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அனைவரையும் ஒலுவிலிலுள்ள கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)