செய்திகள்

சுற்றுலாவின் போது கடலில் நீராடியவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நேற்று மாலை நீராடிக்கொண்டிருந்த எஸ்.ரீ.துஸான் துலன்ஜய (வயது – 23) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல, கனாதென்ன பிரதேசத்திலிருந்து பஸ் வண்டியில் 33 பேர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாசிக்குடாவுக்கும் வந்தனர். இந்த நிலையில், இவர் பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.