செய்திகள்

சுற்றுலா விசாவில் சென்று நகை விற்கும் இந்திய வியாபாரிகள்! யாழில் எதிர்ப்பு

சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபடும் இந்திய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நகைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் நகைத் தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் இடையூறுகள் காரணமாக சிறந்த வருமானத்தைப் பெற முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர்.

ஏனெனில் மக்கள் முன்னரைப் போல நகைகளைக் கொள்வனவு செய்வதிலும் அக்கறை காட்டுவதில்லை.

இந் நிலையில் சமீப காலமாக சுற்றுலா விஸாவில் இலங்கை வரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதாந்தத் தவணை மற்றும் கடன் அடிப்படையிலும் நகை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக மிகுந்த சிரமங்களின் மத்தியில் பல இலட்சம் ரூபாவில் உள்@ரில் முதலீடு செய்து நகைத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் மீது பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளீட்டு நகைத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாhதிபதியின் பிரத்தியேக செயலாளரின் கவனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் சங்கம் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-