செய்திகள்

சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 10.25 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஆனைகட்டிக்கு காரில் சென்றார்.

அங்குள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார்.

பிறகு, அவருடன் மதிய உணவு அருந்தினார். பின்னர், அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்ட ரஜினிகாந்த், கோவையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குச் செல்லும் விமானத்தில் சென்னை சென்றார்.

இதுகுறித்து ஆர்ஷ வித்யா குருகுல நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, சாதாரண முறையில் சுவாமியை ரஜினி சந்தித்து சென்றார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு குருகுலத்தில் சுவாமியை அவர் சந்தித்தார் என்றார்.