செய்திகள்

சுவிஸ் குமார் எமது நாட்டுப் பிரஜையல்ல: சுவிஸ் தூதரகம் சொல்கிறது

புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று திங்கட்கிழமை தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்துவதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.