செய்திகள்

சுவீடன் – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள சுவீடன் வௌிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் இன்று இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் நேற்று ஏழு பேர் அடங்கிய குழுவுடன் அவர் நாட்டுக்கு வந்தார்.

இதன்படி, இன்று இவர்கள் வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, சுவீடன் வௌிவிவகார அமைச்சர் வடக்குக்கான விஜயத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

n10