செய்திகள்

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ். விஜயம்: முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் எலிசெபத் வல்ஸ்ரோம், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்யவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் வருகைதந்துள்ள மார்கோட் வல்ஸ்ரோம், மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை நேற்றையதினம் சந்தித்தார். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

R-06