செய்திகள்

‘சு.க.வில் சலுகை பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி ஒன்றை சலுகையாக வழங்கினால் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட வேண்டுமென்று, கட்சியின் ஒரு பகுதியினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவியைப் பெறும் நோக்கம் தனக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிராந்தியக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியது குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
n10