செய்திகள்

சூடான் அதிபரை கைது செய்யுமாறு தென் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் கோரிக்கை

ஆப்பிரிக்க ஓன்றிய மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றுள்ளசூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிரை கைது செய்யுமாறு தென் ஆப்பிரிக்க அரசை சர்வதேச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு சூடானில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது அந்நாட்டு ஜனாதிபதியாக இருந்த பஷிர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பஷிரை கைது செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து சர்வதேச நீதிமன்ற தலைவர் அறிக்கை ஒன்றில் கூறுகையில் நீதிமன்றத்தை வலிமையாக்கும் விதத்தில் எப்போதுமே தென் ஆப்பிரிக்கா செயல்பட்டு வருகிறது. அதேபோல் இம்முறையும் அந்நாடு செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.