செய்திகள்

சூர்யாவின் சிங்கம் 3 ஆரம்பம்

அஞ்சான் மற்றும் மாசு இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் சூர்யாவின் நிலை சற்று இறங்கியுள்ளது.

இழந்ததை நிலையை சரிசெய்ய ஹரியின் சிங்கம் 3 படத்தில் கைகோர்க்கிறார் சூர்யா.

சிங்கம் மற்றும் சிங்கம் 2 வில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா சிங்கம் 3 படத்திலும் சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.

சூர்யா – அனுஷ்கா இருவரும் இரு குழந்தைகளுக்கு பெற்றோராக நடிக்கின்றனர். வேறு ஒரு முன்னணி நடிகையை, இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தையில் இறங்கி இருக்கின்றனராம் படக்குழுவினர்.