செய்திகள்

சென்னையிலிருந்து வந்தவர்கள் இருந்தால் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட அறிவித்தல்

கடந்த 14ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் சென்னையிலிருந்து இலங்கை வந்த யாரேனும் இருந்தால் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் சிலர் சென்னையிலிருந்து வருகை தந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 14 நாட்களில் யாரேனும் வருகை தந்திருந்தால் அவர்கள் பொலிஸாருக்கோ , பொது சுகாதார பரிசோதகருக்கோ அறிவித்து உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)