செய்திகள்

சென்பீட்டர்ஸ் கல்லூரியின் பெண் ஊழியர் கொலை தொடர்பில் இருவர் கைது!

பம்பலபிட்டி சென்பீட்டர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய 44 வயதான பெண் ஊழியரின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மேற்படி பாடசாலையின் காவலாளி எனவும் மற்றையவர் பாடசாலைக்கு வந்து செல்பவர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.

பாடசாலையின் களஞ்சிய அறையிலிந்து அந்த பெண்ணின் சடலம் ஏப்ரல் 19ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.