செய்திகள்

செப்டம்பருக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் அமையும் : பிரதமர்

செப்டம்பர் மாதத்துக்கு முன்னர்  போதுத் தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வலப்பனை  இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் தேர்தலுக்கு தயாராகவேண்டிய கட்டத்திலேயே நாம் இருக்கின்றோம் .விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் செப்படம்பர் மாதத்துக்குள் புதிய பாராளுமன்றமும் அமைக்கப்படவுள்ளது. அந்த பாராளுமன்றத்தில்  புதிய முறைமைகளை உருவாக்க வேண்டும்.  ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி புது யுகத்தை உருவாக்கினோம். அந்த யுகத்தை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டியது எமது கடைமையாகும்.
இதன்படி எதிர்வரும் தேர்தலில் நாம் பெரும்பான்மை பலத்தை பெற்று  வெற்றியடைய வேண்டும். என  பிரதமர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.