செய்திகள்

செம்மணி விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனமும் மோட்டார்சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் பயணித்த சிவலிங்கம் சசிதரன் எனும் இளைஞரே பலியாகியுள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வாகனச் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.