செய்திகள்

செம வசூல் செய்யும் காக்கா முட்டை

படத்திற்கு ஒரு விளம்பரமும் இல்லை, ஆனால், வசூலை கேட்டால் உங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும். தனுஷ் தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காக்கா முட்டை படத்தில் யார் நடித்தார்கள் என்று கூட பலருக்கும் தெரியாது.

ஏனெனில் படத்தில் நடித்த பலரும் புதுமுகங்கள் தான், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்கத்தில் படம் வெளிவருவதற்கு முன்பே தேசிய விருது பெற்றது இந்த காக்கா முட்டை.

இப்படம் முதல் நாள் ரூ 90 லட்சம் வசூல் செய்ய, இரண்டாம் நாள் ரூ 1.10 கோடி வசூல் செய்துள்ளது, 2 நாட்களில் மொத்தம் ரூ. 2 கோடி காக்கா முட்டை வசூல் செய்துள்ளது. சிறுபட்ஜெட் படங்களில் இது கண்டிப்பாக மிகப்பெரிய சாதனையே.